தேசிய மின்மார்க்கத்துடன் இணைகிறது சுன்னாகம் மின்பரிவர்த்தனை நிலையம்!
சுன்னாகம் மின்பரிவர்த்தனை நிலையம் தேசிய மின்மார்க்கத்துடன் எதிர்வரும் 14 ஆம் திகதி இணைக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று(10.09.2013)கிறீன்கிறாஸ் ஹொட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இப்பரிவர்த்தனை நிலையம் 14 ஆம் திகதி திறந்து வைக்கப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.
தற்போது இதற்கான பரீட்சார்த்த விநியோகம் நடைபெறுவதனால் யாழ்ப்பாணத்தில் மின்விநியோகத் தடை ஏற்படவில்லை. அதுமட்டுமல்ல தெற்கையும் வடக்கையும் இணைக்கின்ற ஏ-9 வீதியையும் நாம் மக்கள் பாவனைக்காக செப்பனிட்டுள்ளோம் இவை மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் என்பதுடன் இவை மாகாண சபை அதிகாரங்களுக்கு அப் பாற்பட்டவை எனக்குறிப்பிட்டார்.
இது மட்டுமல்லாது தற்போதும் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்
முன்னர் வீதியை கேட்டார்கள், பின்னர் தார் இடுமாறு கேட்டார்கள், தற்போது காப்பற் கேட்டார்கள் அவை அதையும் நாம்தான் செய்துள்ளோம் எனவே நடைபெறவுள்ள மாகாணசபை அதிகாரம் அரசுடன் இணைந்த கட்சிக்கு கிடைக்கும் பட்சத்தில் இவ்வாறான அபிவிருத்திகளை இலகுவாக மேற்கொள்ளமுடியும். இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment