விக்னேஸ்வரனே வட மாகாண சபையின் முதலமைச்சர்! - ஒருமித்த குரல் ஒலிக்கிறது!!
வட மாகாண சபையின் முதலமைச்சராக சீ.வீ. விக்னேஸ்வரனை நியமிப்பதற்காக இன்று (23) பிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடியுள்ளனர்.
அவரை வட மாகாண சபையின் முதலமைச்சருக்கான வேட்பாளராக நியமித்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும்.
அதற்கேற்ப, வட மாகாண சபைக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து போட்டியிட்ட விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட 28 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய ரீஎன்ஏ உறுப்பினர்கள் அனைவரும் விக்னேஸ்வரனை முதலமைச்சராக்குவதற்காக ஒன்று கூடியுள்ளனர். அங்கு அனைவரும் ஒருமித்து விக்னேஸ்வரனை முதலமைச்சராக்குவது குறித்து உத்தியோக பூர்வ தீர்மானம் எடுத்துள்ளனர்.
(கேஎப்)
1 comments :
ராஜபக்ச அரசாங்கத்திக்கும் தமிழ் மக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள், ஆனால் வட பகுதி தமிழர்கள் தாம் நன்றி மறந்தவர்கள் என காட்டியுள்ளார்கள், லிபெரசன் ஆபரேஷன் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றிய ராஜீவ் காந்தியை எப்படி புலிகள் கொன்றர்களோ அதே மாதிரி இதுவரை காலமும் கஷ்டம், துன்பம், இழப்புக்களை தேடித்தந்த பேய்களிடமிருந்து விடுவித்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்று போக வைத்து தம் உண்ட கோப்பையில் பேலும் ஒரு இனம் என மறுபடியும் நிருபித்துள்ளனர்.
Post a Comment