Monday, September 9, 2013

தமிழீழ சிந்தனையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகவில்லை - பாட்டலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள கொள்கை பிரகடனத்திற்கு, எவரனும் உதவினால், அது, நாட்டுக்கு எதிராக செயற்படுவது மற்றும் பயங்கரவாதத்திற்கு தீனி போடும் செயலாகுமென, அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

தமிழீழ சிந்தனையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகவில்லையென்பது, அவர்களது சமீபகால செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக 3 விடயங்களை முன்வைத்துள்ளது. வடக்கு, கிழக்கு தமிழர்களின் சுய உரிமை கொண்ட பிரதே சங்கள். சிங்கள மக்களுக்கு சமமான முறையில் தமிழ் மக்களும் வேறு இனமாக வாழ்ந்ததாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியான ஆட்சியை உருவாக்க முடியுமென்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு தொடக்கம் ஒரு இலட்சத்து 50 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உண்மைக்கு புறம்பானது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொடக்கம் நீலன் திருச்செல்வம் வரை எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினால் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதுவித கருத்தினையும் தெரிவிப்ப தில்லை. தமது தலைவர்கள் தொடர்பில் எதுவித கருத்துகளையும் தெரிவிக்காதோர், சிங்கள மற்றும் முஸ்லி ம்கள் தொடர்பில் கருத்துகளை தெரிவிப்பார்களா? சிங்களவர்கள், எந்தவொரு தமிழ் தலைவரையும் கொலை செய்யவில்லை.

வடக்கிலிருந்து சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதுவித கருத்தினையும் தெரிவிப்ப தில்லை. மீண்டும் நாட்டை யுத்தத்திற்கு தள்ளிவிடக்கூடிய செயற்பாடுகளையே, இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

விக்னேஸ்வரன், மீண்டும் நாட்டை யுத்த அபாயத்திற்குள் தள்ளியுள்ளார். இதுவே, இவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களாகும். நாம் மீண்டும் யுத்தத்தை விரும்பவில்லை. விக்னேஸ்வரன் இந்த சவாலை விடுத்திருந்தால், அதனை நாம் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த அனைத்து தரப்பினரும் மீள ஒன்றிணையுமாறு, நாம் கேட்டுக்கொள்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் அனைத்து கட்சிகளும் நாட்டுக்கு எதிரானவர்கள். எல்.ரி.ரி.ஈ யினரால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் இவர்களே பொறுப்புக்கூற வேண்டும்.

No comments:

Post a Comment