முன்னாள் எல்.ரி.ரி.ஈ புதுமணத்தம்பதிகள்!
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போது இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க ஆகிய சமய சம்பிர தாயப்படி திருமணம் நிகழ்வுகள் இடம்பெற்றன.
முன்னாள் எல்.ரி.ரி.ஈ இயக்க உறுப்பினர்களான பேரின்பநாதன் வர்மன் மற்றும் நடராசா சுகிர்தா ஆகியோர் இந்து சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும் புனர்வாழ்வு பெற்று தற்போது சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ளனர்.
இதேவேளை, புலிகள் இயக்கத்தில் மிகவும் உயரம் குறைந்தவராகவும் ராதா படையில் இருந்தவருமான முருகையா சசிகுமார் மேரி பபிலாவை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அத்துடன் சிங்கள இனத்தவரான சிவில் பாதுகாப்பு படை வீரர் ஹர்ஷ நூவான், பிரேமரத்னம் சுகந்தினியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் சிங்கள முறைப்படி இடம் பெற்றது.
கிளிநொச்சி – முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிவில் பாதுகாப்பு படையணியின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் கேணல் டப்ளியூ. டப்ளியூ.ரத்ன பிரிய ஆகியோர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.
0 comments :
Post a Comment