இலங்கையை சேர்ந்த பிரதான ஆட்கடத்தல் மன்னன் இந்தோனேஷிய பொலிஸாரால் கைது!!
அவுஸ்திரேலியாவுக்கு படகில் அகதிகளை ஏற்றிச் சென்ற வேளை குறித்த கப்பலில் இருந்த அகதிகள் இந்தோனே ஷியாவின் ஜாவா தீவுக்கு அருகே வைத்து மூழ்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த அக்ரம் என்ற நபரே தெற்கு ஜகார் த்தா பகுதியில் வைத்து இந்தோனேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளி யிட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் அவுஸ்திரேலியா நோக்கி 210 பேரை படகில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் படி இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த படகில் பயணித்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 100 பேர் வரையில் உயிரிழந்ததோடு பலர் காணாமற் போயிருந்தனர்.
இலங்கை, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகே விபத்துக்கு முகங்கொடுத்தது.
0 comments :
Post a Comment