சுயமரியாதையை காப்பாற்ற வேண்டுமானால் இந்தியாவிடம் கையேந்துவதை நிறுத்த வேண்டும் - சொயிப்
இந்தியாவிடம் கையேந்துவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டு மென சொயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம் பெறவுள்ள செம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க பாகிஸ் தானில் பைசலாபாத் வோல்வ்ஸ் அணிக்கு விசா அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு பாதுகாப்பு பிரச்சினையே காரணமென இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விசா அனுமதியைப் பெறுவதற்காக பாகிஸ் தான் கிரிக்கெட் சபை, இந்திய கிரிக்கெட் சபையின் பின்னால் ஓடுவதை நிறுத்த வேண்டுமென சொயிப் அக்தர் வலியுறுத்தியுள்ளார். பைசலாபாத் அணியை இந்திய கிரிக்கெட் சபையே செம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத் திருந்தது. குறித்த சந்தர்ப்பத்திலேயே அதற்கு மறுப்பு தெரிவித் திருக்க வேண்டும்.
இதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சுயமரியாதையை காப்பாற்றியிருக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இனி எந்தவொரு காலத்திலும் இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லையென முடிவெடுக்க சிறந்த நேரம் உருவாகியுள்ளதாகவும் சொயிப் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி சிறப்பாகவிருந்தால் ஏனைய அணிகள் போட்டியிட தானாக முன்வரும். எனினும் இம்ரான் கானைப் போன்ற துணிச்சலான தலைவர் தற்போதைய அணியில் இல்லை. இதனால் ஏனைய அணிகளுக்கு நிபந்தனை விதிக்க முடியாத சூழல் காணப்படுவதாக அக்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்திய கிரிக்கெட் சபை பைசலாபாத் அணிக்கு அழைப்பு விடுத்தும் மத்திய அரசாங்கம் விசா அனுமதி வழங்காமை பாகிஸ்தானை அவமதிக்கும் செயலாகுமெனவும் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment