Sunday, September 15, 2013

'முஸ்லிம் வர்ல்ட்' சஞ்சிகை அமைச்சரவையை சூடேற்றுகிறது....!

மத்திய கிழக்கில் பிரசுரிக்கப்படுகின்ற 'முஸ்லிம் வர்ல்ட்' எனும் சஞ்சிகை இலங்கையில் பௌத்தர்களால் முஸ்லிம் கள் துன்புறுத்தப்படுகின்றனர் என  அறிக்கையொன்றை பிரசுரித்திருந்தது.

இது தொடர்பில் சென்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீண்ட நேரப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது..

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கருத்திற்கொண்டு, இந் அறிக்கையின் மூலம் சிங்கள - முஸ்லிம்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்கின்றன என அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

முஸ்லிம் வர்ல்ட் சஞ்சிகையின் 2013 ஜூன் மாத சஞ்சிகையிலேயே இந்தச் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை முஸ்லிம் பெண்கள் இலங்கை பௌத்தர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும், முஸ்லிம்களின் புனிதத் தலங்கள் தகர்க்கப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேற்படி அறிக்கை  தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள அமைச்சரவை, கொழும்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களை வரவழைத்து அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்குமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சைக் கேட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment