முதலமைச்சர் நியமனம் தொடர்பாக முடிவு செய்ய ததேகூ-வை அழைக்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர்.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜி.ஏ. சந்திரசிரி, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ள முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சி.வி. விக்கனேஸ்வரனை, அவரது முதலமைச்சர் நியமனம் மற்றும் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக அடுத்த கிழமை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் இராணுவத் அதிகாரியான ஆளுநர் ஒருவர் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளமாட்டார் என்ற செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நியமனம் என்பது ஜனாதிபதியின் நியமனம். விதிமுறைகளின் பிரகாரம் முதலமைச்சர் ஆளுநர் முன் பதவிப்பிரமானம் செய்யவேண்டும். அவ்வாறு மறுப்பதற்கு நீதியில் இடமுண்டா, இல்லை இது வெறும் வாய் வீராப்புத்தான என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
1 comments :
இது காலனித்துவ ஆட்சியை வெளிப்படுத்துகின்றது. இலங்கையில் உண்மையான நீதி, நேர்மை, சமாதானம் தேவைப்படின், இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகள், செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இவை தொடருமாயின் மீண்டும் ஒரு பாரிய நெருக்கடியில் நம் நாடு சிக்குண்டு , இறுதியில் தமிழரின் ஆட்சியில் இலங்கை உட்படும் என்பதில் சந்தேகமில்லை. அக்காலத்தில் ராஜபக்ச குடும்பம் மற்றும் இக்கால கீழ்தர அரசியல் வாதிகளின் சமாதிகளுக்கு சிங்கள மக்களே காறி துப்பும் நிலை தான் ஏற்படும்.
இது எல்லாம் தேவையா? இவ்வுலகில் நல்ல மனிதராக இருந்து நற்பெயருடன் மருணி ப்பதே மனிதர்களுக்கு அழகு. அதனால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வாய்ப்பு ஏற்படும்
Post a Comment