TNA யின் போனஸ் ஆசனங்கள் இரண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன! சங்கரியின் நிலை அம்போ.. தம்பி பெற்றோல் தேடுகின்றார்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடமாகாண சபை தேர் தலின் கிடைத்த இரண்டு போனஸ்ஆசனங்களுக்கும் பெயர் கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஐயூப் ஆஸ்மின் மேலதிக ஒரு ஆசனத் துக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் ஏற்றுக்கொள் ளப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, மற்றும் ஒரு ஆசனத்துக்காக சுழற்சி முறையில் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. இதன்படி முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வி கண்ட தமிழர் விடுதலைக்கூட்டணியின் மேரி கமலா குணசீலன் முதலாம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் வருடத்துக்கு ஈழமக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின் வவுனியாவை சேர்ந்த எம் பி நடராஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மூன்றாம் வருடத் துக்காக தமிழரசுக்க்கட்சியின் மன்னாரில் போட்டியிட்ட சிவகரன் தெரிவு செய்யப் பட்டுள்ளார். நான்காம் ஆண்டுக்காக வவுனியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ரவி தெரிவானார்.
ஐந்தாம் ஆண்டுக்கான ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்துக்கு ஒதுக் கப்பட்ட போதும், அந்தக்கட்சி அதற்குரிய பெயரை பரிந்துரைக்கவுள்ளது. எனினும் வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை எதிர்வரும் 2 ஆம் திகதியன்று அமைக்கப்படும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நான்கு பங்காளிக்கட்சிகளான தமிழர சுக்கட்சி, தமிழீழு மக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும், இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து, தீக் குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண் ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்தமை குறிப் பிடத்க்கது.
0 comments :
Post a Comment