Thursday, September 5, 2013

திருட்டு வெளியாகியது... ஷிராணி ஊழல் ஆணைக்குழுவிலிருந்து தப்பியோட்டம்!

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நேற்று (04) இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன், இதற்கு மேலும் தான் அவ் ஆணைக்குழு முன் ஆஜராகப் போவதில்லை எனக்கூறி அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார். ஆணைக்குழு மீது அபிப்பிராயம் இருப்பதாகவும், ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதால் தொடர்ந்தும் அவ் ஆணைக்குழு முன் தான் காட்சியளிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக ஆணைக்குழுவின் முன் ஆணைக்குழு முன் சாட்சியளித்த அவர், இதற்கு முன் தான் முன்வைத்த எந் தவொரு மறுப்புரைக்கும் இதுவரை ஆணைக்குழு பதிலளிக்கவில்லை எனவும், தன்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு இதுபற்றிக் குறிப்பிடுகையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஆணைக்குழு முன்னர் அவருக்கு தன் சுத்தவாளி என்பதை நிரூபிக்க முடியாமல் அவர் எழுந்து சென்றதாகவும் குறிப்பிடுகின்றது.

அவர் பிரதம நீதியரசராக இருக்கும் போது, அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை ஆய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற நிருவாகக் குழுவிலிருந்து அவர் விலகிச் சென்றதற்கான காரணமும் அவர் அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டமையினாலேயாகும் எனவும் பாராளுமன்ற நிர்வாகக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment