Friday, September 13, 2013

பொலிஸ் சார்ஜன்களை முழந்தாளிட வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் தொடர்பிலான விசாரணை நிறைவு!

பொலிஸ் சார்ஜன்களை அரைமணித்தியாலம் முழந்தாளிட வைத்து தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவின் விசாரணை நிறைவடைந் துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரி வித்துள்ளார்.

அந்த விசேட குழு காத்தான்குடிக்கு சென்று தனது விசார ணைகளை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது. அந்த விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம் விரைவில் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் சார்ஜன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்களை முழந்தாளிட வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கே விசேட குழு நியமிக்கப்பட்டது.

முழந்தாளிட்டு தண்டனையை அனுபவித்ததாக கூறப்படும் சார்ஜன்களிடமும் இந்த விசேட குழு வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிற்கு எதிராகவே குற்றச்சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக் தாகும்.

No comments:

Post a Comment