முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க காலமானார்!
வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க இன்று (27) காலமானார். 1954ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி பிறந்த பேர்டி பிரேமலால் திஸாநாயக்க கல்வி, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கியவராவார் 1971ம் ஆண்டு தனது தந்தையின் மறைவை அடுத்து குடும்ப பொறுப் புக்களை ஏற்க வேண்டி ஏற்பட்டதால் கல்வியை இடை நிறுத்தினார்.
அதன்பின் ஒரு வர்த்தகராக அவர் தொழில்புரிந்து வந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஹொரண செயலாளராக 1972ம் ஆண்டு அரசியலில் இணைந்தார். அதன்பின் தலாவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.
பின்னர் 1999ம் ஆண்டு வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment