பருத்திதுறையில் நெனசல நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது!
பிள்ளைகளுக்கு புதிய உலகில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை எற்படுத்தும் வகையில் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் வடமாகாணத்திலும் நெனசல நிலையங்கள் திறக்கப்படு கின்றன.
தொழிநுட்பத்துடன் நாளுக்கு நாள் முன்னேறி வரும் உலகில் பிரவேசிப்பதற்கு நாடு முழுவதிலும் நெனசல நிலையங்களை உருவாக்கி பிள்ளைகளின் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஓர் கட்டமாக வடமாகாணத்தில் 700 வது நெனசல நிலையம் பருத்திதுறையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது. தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். இவ்வேலை திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் வடமாகாணத்தில் மேலும் 40 நெனசல நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
ஒரு நிலையத்திற்கு ஒரு மில்லியன் ரூபா செலவிடப்படும். புதிய உலகுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் சந்தர்ப்பத்தை தலைநகரின் வெளியேயுள்ள பிள்ளைகளுக்கும் வழங்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என அமைச்சர் என அங்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment