த.தே.கூ. தேசிய சகவாழ்விற்கு பாரிய சவால்! யாழில் இருக்கின்ற, யாழில் இருக்கப்போகும் ஒருவருக்கு வாக்களிக்கவும்!
தேசிய சகவாழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய சவாலென, அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்து ள்ளார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
நாம் ஒன்றை கூற விரும்புகின்றோம். யாழில் இருக்கின்ற, யாழ்ப்பாணத்தில் இருக்கப்போகும் ஒருவருக்கு வாக்களிக் குமாறு கூறுகின்றோம். ஐக்கியத்தை ஏற்படுத்தியுள்ளோம். புனர்வாழ்வளிக்கப் பட்டுள்ளது, மீள்குடியமர்த்தியுள்ளோம். நிலக்கண்ணிவெடிகளை அகற்றியுள் ளோம்.
கூறிக்கொண்டு பேவதற்கு எமக்கு ஒரு பட்டியலே இருக்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு என்ன இருக்கின்றது அவர்கள் கூறுவதற்கு? யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களும், புத்திஜீவிகளும் தொடர்ந்தும் ஏமாற்றமடைய மாட்டார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனங்களுக்கிடையே குரோதத்தை தான் ஏற்படுத்த முடியும். மீண்டும் வன்முறைகளுக்கான வழி வகைகளை ஏற்படுத்து வார்கள். அதனூடாக வாக்குகளை பெற முயல்வார்கள். நான் ஏற்கனவே கூறிய பட்டியலுக்கு அவர்களால் பதில் கூற முடியவில்லை.
ஜனாதிபதியின் கூட்டம், புதுக்குடியிருப்பில் இடம்பெறவுள்ளது. நீங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் கூட நினைத்தீர்களா? தென்பகுதி ஜனாதிபதி ஒருவர் புதுக்குடியிருப்புக்கு சென்று தேர்தல் பிரசார கூட்டத்தை நடாத்துவார் என்று? அந்தளவு ஒரு உறுதியான நிலைப்பாட்டை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். வடபகுதி மக்களை பேதங்களின்றி அவர்களை இணைத்துக்கொள்வதே, எமது நோக்கமாகும். இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும், அந்த மக்களின் உள்ளங்களை வெல்லும் முயற்சிகளையே மேற்கொள்கிறது.
1 comments :
You said exactly what we have been thinking.
Post a Comment