ஐ.நா.சபையில் மஹிந்தர் என்ன சொன்னார்? கேட்டுப்பாருங்கள் வீடியோ உள்ளே..
சர்வதேச அரங்கில் இடம்பெறும் நடைமுறைகள் வேதனை யையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. சில அமைப்புகள் வளர்முக நாடுகளின் உள்விவகாரங்களில் பாதுகாப்பு, மனித உரிமைகளை பாதுகாத்தல் போன்ற போர்வைகளின்கீழ் தலையிடுவதையும் நாம் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இதனால் நாம் தொடர்ந்தும் உலகில் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக எதிர்ப்புகளை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
இவை வன்முறைகளுக்கு தூபமிடுவதுடன் வன்முறைகளுடன் அரசியல் மாற்றங் களையும் ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது கூறினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சில நாடுகள் உலகத்தை பொலிஸார் போன்று கண்காணிப்பதற்கான அவசியம் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பாதுகாப்பை பல நாடுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வரும்போது இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவை யில்லை. நாங்கள் பதவியில் இருக்கும் போது இந்த செயற்திட்டத்தை நடைமுறை ப்படுத்தி நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பின் மூலம் அணுசக்தி மற்றும் இரசாயன ஆயுதங்கள் மூலம் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்குதல் அவசியமாகுமென அங்கு வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனது நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட அபிவிருத்தி திட்டங்களைப் பற்றி எடுத்துரைப் பதற்கு வாய்ப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 3 தசாப்தங்களாக நிலைத் திருந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியமை குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
அதையடுத்து நாம் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கப்பாட்டு செயற்பாடுகளில் எமது கவனத்தை திருப்பியிருக்கிறோம். இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொது மக்களின் அபிப்பிராயத்தை பிரதிபலிக்கக்கூடிய செயற் பாடுகளுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. எனது அரசாங்கம் சகல துறை களிலும் ஏற்புடைய யதார்த்தமான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இதுவிடயத்தில் வடமாகாண மக்கள் மூன்று தினங்களுக்கு முன்னர் தேர்தலில் வாக்களித்து மாகாணசபைக்கு தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப் பினார்கள். கால் நூற்றாண்டுக்குப் பின்னர் இத்தகைய வாய்ப்பை இந்த மக்களுக்கு பெற்றுக் கொடுத்தமை குறித்து நான் உண்மையிலேயே மனநிறைவை அடை கிறேன்.
அரசியல் வலுவூட்டுதல் மற்றும் நல்லிணக்கப்பாட்டுக்கு இந்த செயற்பாடு முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது என்பது குறித்து எவரும் சந்தேகம் கொள்ள முடியாது. எனவே, சர்வதேச சமூகம் இத்தகைய முயற்சிகளுக்கு பொறுப்புணர் வுடன் உதவி செய்து அதனை வெற்றிகரமாக இலங்கை மக்கள் அனைவருக்கும் நன்மையடைவதாக மாற்றும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
நான் முதலில் கென்யாவில் ஒரு சந்தையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குத லினால் உயிர்த்துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனது நாடு ஏறத்தாழ 3 தசாப்தங்களாக இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. எனவே, இலங்கையர்களான நாம் இந்த கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்க விரும்புகிறோம்.
2012ம் ஆண் டின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணின்படி உலகில் உள்ள 187 நாடுகளில் இலங்கை 92ஆவது இடத்தை பெற்றது. 2012ம் ஆண்டில் இலங்கையின் வறுமை நிலை 15.2சதவீதத்தில் இருந்து குறுகிய 5 ஆண்டு காலத்தில் 6.5 சதவீதமாக குறைந்தது. இது புத்தாயிரமாவது ஆண்டு நடுத்தவணை இலக்கையும் விட குறைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இன்று இலங்கையில் ஆயிரம் குழந்தைகளில் 9.4 குழந்தைகளே மரணிக்கின்றன. இந்த வெற்றிக்கதை யுனிசெப் ஸ்தாபனத்தினால் முன்னுரிமை அளித்து வெளி யிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகளில் இலங்கை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வுள்ளது. இலங்கை 2013ம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் இளைஞர் பேரவைக் கூட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்தவுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் இளைஞர்களுக்கான உலக மகாநாடும் 2014 மே மாதத்தில் இலங்கையில் நடத்தப்படும்.
இயற்கையாகவே மனிதர்களுக்கு திடமான மனத்துடனும் அர்ப்பணிப்புடனும் சவால்களை எதிர்நோக்கி, வாழ்க்கையில் உன்னத இலக்குகளை அடைவதற்கான திறன் இருக்கின்றது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கும் முயற்சியின் மூலம் மனித குலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய விளைவுகள் ஏற்படும் என்பதில் அசையாத நம்பிக்கை இருக்கிறது. புத்தபெருமான் கூறியது போல் ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்திற்கு தானே வழிவகுக்க வேண்டும்.
0 comments :
Post a Comment