இலங்கையை இரண்டாக பிரிக்கும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது!
இலங்கையை இரண்டாக பிரிக்கும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என இந்தியாவின் ´ஹிந்துஸ்தான் ரைம்ஸ்´ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இது புதிதல்ல. அப்பாவி மக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெறுவதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதே உத்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். இப்போதும் அதே உத்தியைத் தான் கையாள்கின்றனர்.
ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்போது அங்கு புலிகள் இல்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. பிரிவினைவாத நோக்கத்தை கொண்டதாகவே கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் உள்ளது.
அந்த பிரிவினைவாதத்திற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த பிரிவினைவாத கொள்கைக்கு எந்த நாடும் ஆதரவு கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக இலங்க பிளவுப்படுவதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment