Wednesday, September 11, 2013

அழகப்பெருமவின் முறைப்பாட்டின் பின்னர் இணையத்தளத்திலிருந்து புலிக்கொடி நீக்கம்!

பெரிய பிரித்தானியாவின் மெட்ரோபொலிடன் பொலிஸாரின் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் தகவல் பெற்றுக் கொள்ளும் பகுதியில் தமிழீழக் கொடியை உள்ளடக்கியிருப்பது குறித்து அதற்கெதிராக பிரித்தானியாவிலுள்ள இலங்கைக் கலாமன்றத் தின் தலைவர் ஜனக அழகப்பெரும இலண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

அழகப்பெரும அவ்வாறு முறையிட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அவ்விணை யத்தளப் பகுதியிலிருந்து ஈழக்கொடி நீக்கப்பட்டுள்ளது.

அழகப்பெரும பொலிஸாருக்குத் தெளிவுறுத்தியதைத் தொடர்ந்தே அவ்விணையத் தளப் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும், பிரித்தானிய இலங்கைக் கலாமன்றத்தின் மூலம் அழகப்பெருமவினால் செய்யப்பட்ட முறையீட்டுக்கு பதில் அனுப்பவுள் ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதே நேரம் இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதுவரை அழைத்து இலங்கையில் இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


(கேஎப்)

2 comments:

  1. நோர்வேயில் உள்ள ஊத்தை சேது தற்போது இந்த கொடியைத்தானாம் கச்சை கட்டியுள்ளாராம். அவர் மாத்திரம் அல்ல அதிர்வு கண்ணன் ’ லங்காசிறி குகன் என்போரும் இந்தக்கொடியிலதான் கோவணம் கட்டியுள்ளார்களாம் ஆனால் தமிழ் சீஎன்என் கண்ணன் பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டுக்குச் சென்று சிங்க கொடியை வணங்கி வருகின்றாராம்.

    ReplyDelete
  2. அண்ணன் கோபாலசாமிக்கும், சீமானுக்கும் தயவு செய்து இதே கோமணங்கள் வாங்கி அனுப்பவும். ஐயா நெடுமாறனுக்கும் ஒன்று.

    ReplyDelete