கொழும்பை அண்டிய பகுதிகளில் குற்றச் செயல்களுடன் பெருந்தொகை பொலிஸார் பங்கு?
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இயங்கும் போதைப் பொருள் விற்ப னையாளர்கள் மற்றும் சமூக விரோத குழுக்களு க்கு பெருந்தொகையான பொலிஸ் அலுவலர் களும் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வருவது தொடர்பான நம்பந் தகுந்த தகவல்கள் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அத்தகைய அலுவலர்கள், குற்ற வாளிகள் கப்பம் பெறுவதற்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஆதரவு அளித்து வருவதாகவும் காணப்படுகின்றது.
கடந்த சில காலமாக அத்தகைய செயற்பாடுகள் இடம் பெற்று வந்தாலும், இவற்றில் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக அவர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக அறியப்படுகின்றது.
பெரும்பாலான அத்தகைய பொலிஸ் அலுவலர்கள் தற்போது ஓய்வுபெற்று விட்டனர்.எனினும் புலன் விசாரணைகளைத் தடுப்பதற்கு தமது செல்வாக்கைப் பயன்படுத்தி வருவதாகவும் இராணுவ புலனாய்வுப் பிரிவு கண்டு பிடித்துள்ளது. நீர்கொழும்பில இருந்த அத்தகைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறினர்.
(Ceylon Today Online)
0 comments :
Post a Comment