வாக்களிப்பு நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் குறித்த நிலையத்தின் வாக்கெடுப்பு இரத்து செய்யப்படும்!
வாக்களிப்பு நிலையங்களில் தேர்தலுக்கு இடையூறு ஏற்படு மாயின், எவ்வித தயக்கமும் இன்றி அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்கெடுப்பை இரத்து செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித் துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தேர்தல்கள் ஆணையாளர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும், தேர்தல் மோசடி இடம்பெறாது என தேர்தல்கள் ஆணையாளர் நம்பிக்கை வெளி யிட்டுள்ளார்.
வாக்களிப்பு நிலையத்திற்கு உள்ளேயோ அல்லது சூழவுள்ள பகுதிகளிலோ சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏதேனும் தடைகள் விளைவிக்கப்பட்டால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்கெடுப்பை இரத்து செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித அழுத்தமும் இன்றி வாக்காளர்கள் தமது வாக்கினை பதிவு செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வதற்கும் வாக்களிப்பின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்கும் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவை நாளை இரவு 8 மணியளவில் வெளியிட முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டு ள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை முதலில் அறிவிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment