நல்லூர் தேர்(படங்கள் இணைப்பு)
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த் திருவிழா இன்று(04.09.2013)காலை 6.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை, கொடித்தம்ப பூஜையினைத் தொடர்ந்து வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுக சுவாமி உள்வீதி வலம்வந்து காலை 7.00 மணிக்கு தேரில் ஆரோகணித்தார்.
இருப்பிடத்தை விட்டு காலை 7.20க்கு புறப்பட்ட தேர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வீதி உலா வந்து 9.00 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்ததுடன் தேர் ஆலயத்தின் தெற்குபக்கமாக திரும்பியவேளை படையினரின் ஹெலிகொப்டர் பூ மழை பொழிந்து.
பெருமளவான பக்தர்கள் தூக்குக் காவடி, செடில் காவடி, பால் காவடி, கற்பூரச்சட்டி எடுத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனைத் தரிக்க வருகை தந்திருந்ததுடன் இவர்களில் வெளிநாட்டவர்களே அதிகம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தன் ஆலய தீர்த்தோற்சவம் நாளை(05.09.2013) நடைபெறவுள்ளது.
0 comments :
Post a Comment