அமெரிக்கா ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது - பிரேசில்
தமது நாட்டில் உளவு பார்த்ததன் மூலம் அமெரிக்கா ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரேசில் குற்றஞ்சாட்டியுள்ளது. சி.ஐ.ஏ வின் முன்னாள் அதிகாரி ஸ்நோவ்டன் அம்பலப்படுத்திய தகவல்களின் அடிப்படை யில் அமெரிக்கா பல்வேறு நாடுகளின் தகவல்களை இரகசியமாக பெற்றுள்ளது.
பிரேஸில் தொடர்பான தகவல்களையும் திரட்டியுள்ளதாக ஸ்நோவ்டன் தெரிவித்தார். இது தொடர்பில் பிரேஸிலுக்கான அமெரிக்க தூதுவரை அழைத்து கேள்வியெழுப்புவதற்கு பிரேஸில் வெளியுறவு அமைச்சர் திட்ட மிட்டுள்ளார்.
பிரேஸில் மற்றும் மெக்சிகோ ஜனாதிபதிகளின் மின்னஞ்சல் முகவரி மற்றும் இரகசியங்களை பெற்றுக் கொண்டது தொடர்பில் பிரேஸில் இதன் போது அமெரிக்க தூதரிடம் வினா எழுப்பியுள்ளது.
0 comments :
Post a Comment