தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அங்கஜனின் தந்தைக்கு பிணை!
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை சாவக்கச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 30 ஆம் திகதி ஆஜர்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவக்கச்சேரி நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டிருந்தார்.
குறித்த நபர் மிதான வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ஐந்து இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
0 comments :
Post a Comment