Wednesday, September 4, 2013

யாழ் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆல யத்தின் வருடாந்த தேர்த் திருவிழா ஆரம்பமாகியு ள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் பூங்காவன திருவிழாவுடன் நிறைவடைய வுள்ளது.

24ம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று நடை பெறுகிறது. காலை 7 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்த ரதோற்சவ பவணி ஆரம்பமாகவுள்ளது.

தேர்த்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நாடெங்கிலுமிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட பிரதிநிதி புஷ்பநாதன் பிரசன்னா தெரிவித்தார்.

பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு குடிநீர் உட்பட சகல நலன்புரி திட்டங்களும் யாழ் மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நாளைய தினம் காலை 7 மணிக்கு தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com