Monday, September 30, 2013

நாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொண்டயன்கேணி முருகன் கோவில் வீதியில் இறந்த நிலையில் கைக் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது நேற்றுக் காலை 6.00 மணியளவில் நாய் சாப்பிட்டுக் கொண் டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தனது வீட்டுக்கு முன்னால் குழந்தை ஒன்றை நாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட பெண்மணி ஒருவர், அயலவர்களின் உதவி யுடன் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அவ் விடத்திற்கு விரைந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப் புமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிணங்க குழந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தலை யும் மார்புப் பகுதிகளுமே உள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள குழந்தையின் கால் மற்றும் கைப் பகுதிகள் விலங்குகளால் சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகி க்கப்படுகிறது.

இக்குழந்தை பிறந்தவுடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் வாழைச்சேனை பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com