Tuesday, September 10, 2013

நவிபிள்ளையின் ஆதரவையும், புலம்பெயர் தமிழர்களினது பண பலத்தையும் கொண்டு உருவானதே த.தே.கூ தேர்தல் விஞ்ஞாபனம்!

சம்பந்தனின் கூட்டணி, தமிழ் பேசும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து தனி ஈழ நாட்டினை உருவாக்கும் நோக்கி லேயே செயற்படுகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது பிரிவினைவாதத்திற்கான அடித்தளமாகும் எனவும், த. தே. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானத்தை நீக்கி அரசாங்கத்திற்கேற்றால் போல் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் ஒன்றியம் இவ்வாறு தெரிவித்ததுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டமானது நீதிக்கு முரணானதாகவே காணப்படுகின்றது. இதன் மூலம் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே நவம்பரில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டின் பின்னர் மக்கள் தீர்ப்பொன்றின் மூலமாக 13ஆவது திருத்தத்திற்கான நடவடிக்கையொன்றினை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

த.தே.கூட்டமைப்பானது சர்வதேச சக்திகளின் உதவியோடு பிரிவினையினை ஏற்படுத்த முயல்கின்றது. ஒரு புறம் நவநீதம்பிள்ளையின் ஆதரவும் மறுபுறத்தில் புலம்பெயர் தமிழர்களினது பண பலமும் சர்வதேச நாடுகளின் தலையீட்டினையும் கொண்டே தமக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தினை கூட்டமைப்பினர் உருவாக்கி யுள்ளனர்.

எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ,இதற்கான சிறந்த நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com