வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் வாய்திறக்கின்றார் பான் கீ மூன்
நாளை இடம்பெறவுள்ள வடமாகாண சபை தேர்தலானது இலங்கை மக்களுக்கு முக்கியவம்வாய்ந்தது எனவும் இத னூடான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமெ னவும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் தொடர்பில் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் 1987ம் ஆண்டிற்கு பின்னர் வடமாகாணத்திற்கான தேர்தல் நடைபெறுகிறது. இது அரசியல் நல்லி ணக்கம் மற்றும் இலங்கையர்களுக்கிடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பு வதற்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்ப்பட்டுள்ள சமாதான சூழலையடுத்து அரசியல் கட்சிகள் தேர் தலில் கவனம் செலுத்தியுள்ளன. யுத்தத்திற்கு பின்னர் சமாதானத்தையும் நம்பிக் கையையும் உறுதிப்படுத்துவதாக வடமாகாண சபை தேர்தல் அமைந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது தற்போது சமாதான சூழலில் இடம்பெறும் வடமாகாண சபைக்கான தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடாத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டு மென ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment