சிங்கள நீதிபதிகள விட புலிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கியவர்தான் விக்னேஸ்வரன். சாடுகின்றார் கேபி.
புலிகளியக்கத்துக்கான ஆயுதக்கடத்தல் மன்னன் கே.பி என அறியப்படுகின்ற குமரன் பத்தமநாதன் நாளை மறுதினம் நடைபெறப்போகும் தேர்தல் அதன் பின்னர் தமிழ் மக்கள் சந்திக்கப்போகும் சிக்கல்கள் தொடர்பில் தான் நடத்திவரும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வைத்து ஊடகவிய லார்களை இன்று சந்தித்து விளக்கியுள்ளார். அங்கு பேசிய அவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி.வி விக்னேஸ்வரன் தலைமை நீதியரசராக இருந்தபோது புலிகளின் சந்தேநபர்களுக்கு உச்ச தண்டனையை வழங்கிவந்தவர் என்றும் விக்னேஸ்வரனின் தீர்ப்புக்கள் சிங்கள நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனையை விடவும் கூடுதலாகவே இருந்தது. ஆனால் இப்போது தேர்தலில் வெல்வதற்காக முன்னாள் போராளிகளின் உரிமைகள் பற்றி பேசுகின்றார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது, எனவும் அந்த விஞ்ஞாபனம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார்.
விடுதலைப்புலிகளின்; சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாக அவர்களை விடுதலை செய்யவேண்டாமென அதிகாரிகளிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வற்புறுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,எஞ்சியுள்ள புலி அங்கத்தவர்களை விடுதலை செய்வதற்கு நான் என்னாலானதை செய்வேன். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தான் ஒரேயொரு பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானம்,ஒஸ்லோ மாநாட்டில் புலி பிரதிநிதிகள் கொண்டுவந்த முன்மொழிவுகள் என்பவற்றின் கலவையாக உள்ளது. இப்போது நாடுக்கு தேவையானது இதுவல்ல என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய இலங்கைக்குள் 13 ஆவது திருத்தத்தையே இந்திய அமுலாக்குவதற்கு விரும்புகின்றது. அவர்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கபட நாடகமாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனந்த சங்கரி சில வருடங்களுக்கு முன்னர் புலிகளை பயங்கரவாதியென்றார்.ஆனால், இப்போது புலிகள் வீரர்கள் என்று கூறிவருகின்றார்.
மேலும் 2009 இல் புலிகளை சம்பந்தன் பாராட்டினார். ஆனால் பின்னர் தான் புலிகளின் கொலைப்பட்டியலில் இருப்பதாக கூறினார். ஏன் இந்த இரட்டை வேடங்கள் ?' என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
0 comments :
Post a Comment