சம்பந்தன், மாவை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இதற்கமைய த.தே.கூ. பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரை நீதிமன்ற த்தில் ஆஜராகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோரையும் நீதிமன்றத்தில் ஆஜரா குமாறு உயர்நீதிமன்றத்தினால் இன்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. ஸ்ரீபவன் மற்றும் ரோஹிணி மாரசிங்க ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தனி நாடு தொடர்பிலான நோக்கங்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளதாக பெங்கமுவே நாலக்க தேரர் மற்றும் குணதாச அமரசேகர உள்ளிட்ட ஐந்து பேர் இந்த மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுக்களை பரிசீலனைக்கு உட்படுத்திய உயர்நீதிமன்றம், அவை தொடர்பான விசாரணைகளை ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்தது. மனுதாரர்களை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான அறிவித்தலை விடுக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment