சிறுவர்களுக்கு சளி சார்ந்த நோய்களுக்கு நீராவி பிடிப்பதை தவிர்க்கவும் !
சிறுவர்களுக்கு பல்வேறு சளி சார்ந்த சுவாச கோளாறுகள் ஏற்படும் போது, பிள்ளைகளுக்கு நீராவி பிடிப்பதை தவிர் க்குமாறு சுகாதார பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீராவி பிடிப்பதனால் பிள்ளைகளின் சளி நோயை கட்டுப்படுத்த முடியாது என ருஹூனு பல்கலை க்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார்.
இதனால் பிள்ளைகளுக்கு தீக்காயங்கள் ஏற்படுவதாகவும், உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். கொழும்பு வைத்திய சாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் 16 வயதுக்கு குறைவான அதிக பிள்ளைகள், நீராவி பிடிப்பதனால் ஏற்படும் தீக்காயங் களுக்காகவே அனுமதிக்கப்படுவதாக ருஹூனு பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான பேராசிரியர் சுஜீவ அமரசேன மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment