வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த சிங்கப்பூர் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!
சிங்கப்பூரில் தொழில்தருணர்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி வேலைவாய்ப்புக்கான விளம்பரம் அரசு வேலை வங்கியில் வெளியிடப்பட வேண்டும் எனவும், குறிப்பாக 25 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு மாதம் 12000 சிங்கப்பூர் டொலர்களுக்கு கீழ் சம்பளம் வழங்கும் நிறுவனங்கள் வெளிநாட்டு நபரை வேலைக்கு அமர்த்துவதற்காக பெறும் அனுமதிக்கு விண் ணப்பிப்பதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாட்டினருக்கு 3,300 டொலராக இருந்த ஆரம்பச் சம்பளம் ஜனவரி 2014 முதல் 3,000 டொலராக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மனித வளத்துறை அமைச்சர் டண் சுவான் ஜின், அரசு விதித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலமாக சிங்கப்பூர் மக்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இது சிங்கப்பூர் மக்களை மட்டும் வேலைக்கு அமர்த்து வதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment