தந்தி சேவைக்கு முற்றுப்புள்ளி! ரெலிமெயில் சேவையினை சட்டபூர்வமாக்க நடவடிக்கை!
அரச ஊழியர்களின் விடுமுறைகள் மற்றும் முக்கிய தேவை களை கருதி ரெலிமெயில் சேவையினை சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் குமார துங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் தந்தி சேவையினை முடி வுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து ரெலி மெயில் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தந்தி சேவை நிறுத்தப்பட்ட போதிலும் அதற்கு மாற்றீடாக தபால் அலுவல கங்களில் ரெலிமெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும். தொழிநுட்ப வளர்ச்சியினை தொடர்ந்து மின்னஞ்சல் ஊடாக முக்கிய தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன. இதனால் தந்தி சேவைக்கு பதிலாக ரெலிமெயில் சேவையினை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment