Tuesday, September 10, 2013

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வீடொன்றை வழங்கினார் மகிந்தவின் பாரியார்!

யுத்தம் இடம்பெற்றபோது, வெடி மருந்து களஞ்சியம் வெடித்து சிதறியதில், உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவிக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் ஜனாதிபதியின் பாரியார் புதிய வீடொன்றை பெற்றுக் கொடுத்துள்ளார்.

கரடியனாறு பொலிஸ் சோதனை சாவடியில் கடமை யாற்றியபோது, இக்களஞ்சியசாலை வெடித்து வெலிமட பகுதியை சேர்ந்த பொலிஸ் சார்ஜன் ஏ.எம். ஜயவர்தன உயிர்நீத்தார். அவரது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் புதிய வீடொன்றை, ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ, மீரிகம, வல்போத்தலேகம பொலிஸ் இராணுவ வீரர் கிராமத்தில் வைத்து வழங்கினார்.

ஒஸ்ரியாவின் வியானா இராணுவ வீரர் நலன்புரி அமைப்பு, இதற்கென 15 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. வீட்டின் அனைத்து நிர்மாண பணிகளும், சிரமதானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் இதற்கு உதவியுள்ளனர். பொலிஸ் சேவை மகளிர் பிரிவு, இதற்கான காணியை வழங்கியிருந்தது. இராணுவ வீரரின் மூன்று பிள்ளைகளினதும் மேலதிக கல்விக்காக, திருமதி. ராஜபக்ஷ புலமைப் பரிசில்களையும் வழங்கினார். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், பொலிஸ் சேவை மகளிர் பிரிவு தலைவி நீபா இளங்ககோன் உட்பட பலரும், இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment