யானை திருட்டை தடுக்க யானைகளை பதிவு செய்ய போகின்றாராம் அமைச்சர் காமினி விஜித்
யானை திருட்டை தடுக்கும் முதல் கட்ட நடவடிக்கையாக யானைகளை பதிவு செய்வதற்கு வன ஜீவராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 10 இலட்சம் ரூபாவை செலுத்தி, இதுவரை பதிவு செய்யப்படாத யானைகளை பதிவு செய்வதற்கு ஒரு வருடம் பொது மன்னிப்பு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச் சர் காமினி விஜித் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்தார்.
யானை மனித முரண்பாடுகளை தீர்ப்பதற்கும், காடுகளை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றை பார்வையிடும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்து வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கு மத்தியில் நாங்கள் யானைக்குட்டிகள் திருடப்படுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு அனுமதி பத்திரங்களை வழங்கி, அதற்காக 10 இலட்சம் ரூபா அறவிடப்படவுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும். விமர்சனங்களை நாங்கள் பொருட்படுத்த போவதில்லை. பொது மன்னிப்பு காலம் வழங்கி யானைகளை 10 இலட்சம் ரூபா செலுத்தி பதிவு செய்து கொள்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எதிர்கால செயற்றிட்டம் தொடர்பாக அறிவுறுத்தும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நேற்று இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பான விடயங்களை தெரிவித்தார். உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக யானைகளை வளர்க்கும் நபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்து வருகின்றன. இதனை தடுக்கும் முகமாக குறித்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment