இலங்கையர் இருவருக்கு நியூசிலாந்தில் கடூழிய சிறை
இலங்கையர் இருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் கடூழிய தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கொலைக் குற்றஞ்சாட் டப்பட்ட இருவருக்கே இவ்வாறு கடூழிய தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
துவான் பிரவேஷ்ட சவால் (வயது 24), முடியான்சலாகே விராஜ் வசந்த அழகக்கோன் (வயது 35) ஆகிய இருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேற்படி இருவரும் நியூசிலாந்தில் வைத்து மற்றுமொரு இலங்கையரான சமீர மதுரங்கன மாணிக்க பட்டளகே என்பவரை கொலைசெய்துள்ளதுடன் அவர் தங்கியிருந்த வீட்டையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.
ஒரு பெண்ணுடன் இடையில் இருந்த கள்ளத் தொடர்பு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment