சிறிகொத்தவில் மலசல கூடம் சுத்தம் செய்வதற்கும் நான் தயார் என்கிறார் சஜித்....!
எவ்வித பிரச்சினைகள் இருந்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதே தனது இலக்கு எனவும், ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்காக சிறிக்கொத்தவில் மலசலகூடத்தை தான் சுத்தப்படுத்த வேண்டிவந்தாலும் மகிழ்வோடு அதனைச் செய்வேன் என்றும் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் (08) மாத்தளையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்ற காலங்களில் ஏற்பட்ட துக்கமயமான நிகழ்வுகளை முழுமையாக மறந்துவிடுங்கள் என ஆதரவாளர்களைக் கேட்டுள்ள அவர், தனக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் பலவற்றையும் தான் இழந்தபோதும் அவை பற்றி நினைக்காது மனதை ஒருநிலைப்படுத்தி தான் இருக்க, ஏன் உங்களால் இருக்க முடியாது எனவும் அவர் வினா எழுப்பியுள்ளார்.
‘என்னை பிரதி தலைவர் என அழைக்கிறார்கள். நானாவது பிரதித் தலைவராவது.. கடும் கோபத்தையும் வைராக்கியத்தையும் உள்ளே வைத்துக் கொண்டு நான் இவ்வாறு சொல்லவில்லை.’ எனக் குறிப்பிடும் அவர், இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைக்காக தான் கூடுதலான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது மாத்தளை மாவட்டத்திலேயே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு விசேட கவனம் செலுத்துதவதற்குக் காரணம் ஒன்று உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஐதேக பிரதித் தலைவர், தன்னை பிரதித் தலைவராக்க வேண்டும் எனக் கோரியது எலிக் அலுவிகாரை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
‘பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்ற பாரியதொரு பேராசை, பசி, தாகம் எனக்கிருக்கிறது. எனது பேராசையும், பசியும், தாகமும் நீங்க வேண்டுமென்றால் இந்தப் பயணத்தில் மாற்றம் ஏற்பட வேண்டிய தேவையிருக்கிறது’ எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment