வேலியே பயிரை மேயலாமா? மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!
10 வயதுடைய மாணவி ஒருவருக்கு ஆபாச படங்களை காண்பித்து, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப் படும் ஆசிரியர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரினால் குறித்த மாணவி மோசமான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை முடிவடைந்த பின்னர், நடைபெற்ற மேலதிக வகுப்பின் போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஒரு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment