Saturday, September 28, 2013

மன்மோகன் சிங்குக்கும் , சோனியாவுக்கும் அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை!

கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர் கலவரத்திற்கு காரணமானவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. சீக்கியர்களை தாக்கிய பொலிசுக்கு சன்மானம் அளித்தது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றில் பிரதர் மன்மோகன் சிங் மீது மனித உரிமை மீறல் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்ற வொஷிங்டன் நீதிமன்றம் மன்மோகனுக்கு அழைப் பாணை அனுப்ப உத்தரவிட்டது.

அமெரிக்காவில் உன்ன "நீதிக்காக போராடும் சீக்கியர்" அமைப்பு கடந்த 20 நாளுக்கு முன், 1984ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தை தூண்டியதாகவும், அதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா மீது வழக்கு போட்டது. அதில் சோனியாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. இதேபோல, மன்மோகன்சிங் அமெரிக்கா வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக இதே அமைப்பு நேற்று முன்தினம் வழக்கு போட்டது. இந்த வழக்கை ஏற்ற வொஷிங்டன் நீதிமன்றம் மன்மோகனுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

இந்த அழைப்பாணை பிரதமரிடம் 120 நாட்களுக்குள் வழக்கு போட்டவர்கள் தரப் பிலான சட்டத்தரணி அளிக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் பலத்த பாதுகாப்புடன் உள்ள மன்மோகன் சிங்கிடம் சம்மனை வழங்க முடியாது. அதனால், அதற்கு அனுமதி கோரி தனி மனு ஒன்றையும் இந்த அமைப்பு தாக்கல் செய்து ள்ளது.

இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றால் எங்களுக்கு தனி அனுமதி கிடைக்கும். அப்போது பிரதமர் மன்மோகனிடம் அவர் தங்கியிருக்கும் இடத்தில் அழைப்பாணை அளிக்க முடியும்' என்று வழக்கு போட்ட அமைப்பின் சட்டத்தரணி குருப்வந்த்சிங் கூறினார். இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட்தான். எற்கனவே சோனியாவுக்கு அழைப் பாணை பெற்றவர்கள். இப்போது பிரதமர் மன்மோகனுக்கு எதிராக பெற்றிருப்பது சொந்த நாட்டுக்கு எதிரான செயல் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com