உயிருக்கு பயந்து ஐ. நா. விஜயத்தை ரத்து செய்தார் மடுரோ!
உயிராபத்து காரணமாக வெனிசுவெலா ஜனாதிபதி நிகொ லஸ் மடுரோ ஐ. நா. பொதுச் சபையின் கூட்டத்தில் பங்கேற் பதற்கு நியூயோர்க் செல்லும் திட்டத்தை ரத்துச் செய்து ள்ளார்.
சீனா சென்று திரும்பிய மடுரோ நேற்று முன்தினம் புதன்கிழமை கனடாவின் வன்கூவர் நகரில் தற்காலிகமாக தரையிறங்கியபோது, தனது ஐ.நா. சுற்றுப் பயணத்தின்போது உயிராபத்து ஏற்படுத்த சதிசெய்யப்பட்டிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து அந்த திட்டத்தை ரத்துச் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தனது உடல் மற்றும் உயிரை பாதுகாத்துக்கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெனிசுவெலா கம்மியுனிஸ கியூபாவுடன் பிராந்தியத்தில் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் நாடாகும். தனது அரசை கவிழ்க்க நாட்டில் உணவு, மின்சாரம் மற்றும் எண்ணெய் விநியோகத்தில் வெள்ளை மாளிகை குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக மடுரோ குற்றம் சுமத்தியிருந்தார்.
0 comments :
Post a Comment