Wednesday, September 11, 2013

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் மீது சட்டத்தரணிகள் சங்கம் வழக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டின் தாய்ச்சட்டமான அரசியல் யாப்பை மீறும் வகையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாகவும் எனவே இதனை தடைசெய்யுமாறு கோரி கொழும்பு சட்டத்தரணிகள் பேரவை உயர்நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாக சட்டத்தரணிகள் பேரவையின் அழைப்பாளர் கபில கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்த வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டுவோர் அரசியல் அமைப்பைப் பேணிப் பாதுகாப்பதாக வாக்களிக்க வேண்டியது அவசியமானது எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் அரசியல் அமைப்பிற்கு புறம்பானது.

தனி இராச்சிய கோரிக்கையை முதனிலைப்படுத்தி கூட்டமைப்பு கொள்கைப் பிரடகனத்தை வெளியிட்டுள்ளது குறிப்பாக சுயாட்சி அதிகாரம், வடக்கு கிழக்கு மீள இணைவு உள்ளிட்ட பல்வேறு அரசியலமைப்பிற்கு முரணான விடயங்கள் போன்றவை கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் வெற்றியீட்டினால், வடக்குமாகாண மக்களின் ஆணையை சர்வதேச சமூகத்திற்குக் காண்பித்து தனி இராச்சியமொன்றை அமைக்கும் முனைப்புக்களை கூட்டமைப்பு மேற்கொள்ளும் என செத்சிறி பாயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com