Friday, September 6, 2013

நல்லூரான் தேர் திருவிழாவில் அரசியல்!! - வன்மையாக கண்டிக்கிறார் தவராசா

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவை தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாவித்தது மிகவும் கண்டிக்கத்தக்கதும், கவலைக்குரிய விடயமும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் தவராசா ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நல்லூர் தேர்த் திருவிழாவிற்கு விஜயம் செய்திருந்த இரா. சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தேர்த்திருவிழா நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த டான் ரீவி.யின் தற்காலிக ஒளிபரப்பு நிலையத்திற்குள் அழையா விருந்தினர்களாக நுழைந்தனர்.

டான் ரீ.வி நிர்வாகம் நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு ஆசிச் செய்தியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்கிய போது, அச்சந்தர்ப் பத்தை துஷ்பிரயோகம் செய்த சம்பந்தன் ஐயா விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பிரச்சாரம் செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும், கவலைக்குரியதுமாகும் என குறிப்பிட்டார்.

அத்துடன் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூட்டணி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தனது தேர்தல் பிரசுரங்களை விநியோகித்ததாகப் பக்தர்கள் கவலையுடன் முறையிட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இது மட்டும்லாது ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரனுடைய தேர்தல் பிரச்சுரங்களும் விநியோகித்ததை காணக்கூடியதாக இருந்ததுடன் ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு நிறுவனங்களால் வளங்கப்படம் பிரச்சுரங்களை கூட பக்தர்கள் தேர்தல் பிரசுரங்களா என வினைவியதை காணக்கூடியதாக இருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com