பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்தால் ஆட்சியைக் கவிழ்ப்பேன்! – உபுல் சாந்த ஸன்னஸ்ஸல
ஞாயிறு தனியார் வகுப்புக்களை தடைசெய்வதற்காக சட்டம் கொண்டுவந்து, தனியார் வகுப்புக்களை தடை செய்தால் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று பிரபல தனியார் வகுப்பு ஆசிரியர் உபுல் ஸன்னஸ்ஸல குறிப்பிடுகிறார்.
‘மவ்பிம’ பத்திரிகையின் நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு சட்டம் நிறைவேற்றப்படுமாயின், பெற்றோர் தர்மப் பாடசாலைகளுக்குச் செல்வது எப்படியிருந்தாலும், பெற்றோர் கோவிலுக்கு கொடுக்கும் நன்கொடைகளையும் தானங்களையும் நிறுத்திவிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அநியாயங்களும், சீரழிவுகளும் தனியார் வகுப்புக்களினால் அல்ல நிகழ்கின்றன. அவை மத அநுட்டான நிலையங்களிலேயே அதிகம் நிகழ்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள ஸன்னஸ்ஸல, தனியார் வகுப்புக்களைத் தடை செய்வது ஒருபுறமிருக்க அவற்றை நிறுத்திப் பார்க்கட்டும் என்றும் அந்நேர்காணலில் சவால் விடுத்துள்ளார்.
சிலர் இப்படி நினைக்கலாம். ‘தர்மப் பாடசலைக்கு சென்றால் தன் பிள்ளையைத் திருத்திக் கொள்ளலாம்’ என்று... தனது பிள்ளையின் எதிர்காலம் ஒளிமயமாகும் என்று... பிள்ளை மிக ஒழுக்கமாக சீலமாக வளரும் என்று...
பிள்ளை தர்மப் பாடசாலைக்குச் சென்றால் சீரழியும் என்று சிலர் நினைக்கலாமே... நான் ஓர் உதாரணம் சொல்கிறேன்... இலங்கையில் சில மத அநுட்டான நிலையங்கள் உள்ளன. அவை பாதாள உலக மத்திய நிலையங்கள்.. அதுபோன்று தர்மப் பாடசாலைக்குச் அனுப்பினால் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளின் பிள்ளைகள் போலும் பிள்ளைகளை உருவாக்கலாம்.
இலங்கையில் சிறுவர் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றிருப்பது தனியார் வகுப்புக்களினாலா? பாடசாலைகளினாலா? இரண்டிலும் இல்லை. மத அநுட்டான நிலையங்களில். அதனால் பிரத்தியேக வகுப்புக்களுக்கு, பாடசாலைக்கு, பொலிஸ் நிலையத்திற்கு, இராணுவ முகாம்களுக்கு அப்பாற் சென்று மிக மோசமான இடம் மத அநுட்டான நிலையங்கள் என்று கூறக்கூடிய காலமாக இக்காலம் உள்ளது. ஆசியாவின் கல்விக் கேந்திர நிலையமாக மாற்றும் செயல் அல்ல இது. ஆசியாவின் மதக்கருக்கட்டலாகவே கொள்ளப்படுகிறது.
உபுல் ஸன்னஸ்ஸ சென்ற முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சபரகமுவ மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட முனைந்தார். என்றாலும், பின்னர் அந்த எண்ணத்தை மாற்றியமைத்துக் கொண்டார். அதேபோல இந்நாட்டில் பாரிய எதிர்ப்பைச் சம்பாதித்த ‘தனி தட்டுவென் பியாம்பன்ன ( தனி இறக்கையில் பறந்து செல்லுங்கள்) என்ற திரைப்படத் தயாரிப்பாளரும் ஸன்னஸ்ஸல ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment