இறைமையுள்ள ஒரு இராச்சியத்தை சீர்குலைக்க சர்வதேச சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்படுகின்றது!
இறைமையுள்ள ஒரு இராச்சியத்தை சீர்குலைக்கும் சர்வ தேச சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் களை ஏற்படுத்தி மக்களின் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைப்பதே சூழ்ச்சிகாரர்களின் நோக்கம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாதுகாப்பு மாநாட்டில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டின் 2ம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்தார்.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கை சவால்கள் மற்றும் பிராந்திய நிலைப்பாடு என்பது இம்முறை மாநாட்டின் தொனி பொருளாகும்.
29 நாடுகளின் பாதுகாப்பு உயரதிகாரிகள், புத்திஜீவிகள், விரிவுரையாளர்கள் உட்பட 300 ற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நாடுகளை சீர்குலைக்கும் சர்வதேச சூழ்ச்சிகாரர்கள் தொடர்பாக சகல இன மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக் காட்டினார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டதை போன்று அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
இந்த நற்காரியம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பது கவலை க்குரியதாகும். இன்று வடக்கில் சமாதானம் ஏற்பட்டுள்ளதை போன்று 3 தசாப்தங்களுக்கு பின்னர் அங்கு தேர்தல் ஒன்றும் நடைபெறவுள்ளது.
உண்மையான மனித உரிமைகளை மதிக்கும் சர்வதேச சமூகம் இச்சந்தர்ப்பத்தில் மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் அத்துடன் இலங்கை தொடர்பாக நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment