வரலாற்றில் முதன்முறையாக கல்முனையில் களமிறங்கும் வெளிநாட்டு உதை பந்தாட்ட அணி!
கல்முனை விளையாட்டு துறை வரலாற்றில் முதல் தடவையாக வெளி நாட்டு உதை பந்தாட்ட கழகமொன்று கல்முனை யில் விளையாட உள்ளது.
கல்முனை சந்தான்கேணி பொது விளையாட்டு மைதான த்தில் வெள்ளிகிழமை (20) கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்துக்கும் நைஜீரியா ஏ.வீ சொகர் அகடமி கழகத்துக்கும் இடையே சினேகா பூர்வ போட்டி இடம் பெறவுள்ளதாக கல்முனை பிர்லியன் கழகத்தின் பொது செயலாளர் எஸ்.ரீ தெரிவித்தார்.
பிர்லியன் கழகத்தின் விளையாட்டு குழு தலைவர் யெஹியா அரபாத் எடுத்த முயற்சியின் பயனாகவே நைஜீரியா ஏ.வீ சொகர் அகடமி கழகம் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
யு.எம்.இஸ்ஹாக்.
0 comments :
Post a Comment