ஹெய்ட்டியில் இலங்கை படையினர் செய்தது என்ன? சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் ஹெய்ட்டிக்கு விரைவு!
ஹெய்ட்டியில் ஐ.நா படையின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ சிப்பாய் ஹெய்ட்டியில் பெண்ணை வல்லுறவுக் குட்படுத்தியது சம்பந்தமான அறிக்கையை பரிசீலனை செய்வதற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்காவின் உத்தரவின் கீழ் சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் ஹெய்ட்டிக்கு செல்ல வுள்ளனர்.
இந்த சம்பவத்தை பரிசீலனை செய்து குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனையளிக்கவுள்ளதாக இராணுவ தளபதி ஐக்கிய நாட்டு சமாதான அலுவலகத்திற்கு உறுதியளி த்துள்ளார். ஐக்கிய நாட்டு படையில் உள்ள இராணுவ பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பமான. ஐக்கிய நாட்டின் மற்றைய விசாரணை குழுவிற்கும் விசாரணை செய்வதற்கு இலங்கை ஐக்கிய நாட்டு பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரிக்கும் அறிவிப்பு விடுக்கப்படும்.
இராணுவ தளபதியினால் இராணுவ நீதிமன்ற விசாரணை குழு அங்கத்தவர்களாக இராணுவத்தின் விதாயக ஜெனரல் மேஜர் ஜெனரல் என். ஏ. ஜே.சீ. டயஸ், ஒழுக்கம் சம்பந்தமான மேல் அதிகாரி மேஜர் ஜெனரல் ஈகேஜேகே விஜயசிறி மற்றும் நீதிச்சேவை பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்பி ராஜபதிரன, மேஜர் எச்எஸ்கே ஜயசிங்க மற்றும் மேஜர் பீ. ஏபா நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரிசோதனையின் நிமித்தம் ஹெய்ட்டிக்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் நேரடியாக விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொள்வதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் உடனடியாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இராணுவ நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவர்.
இந்த விசாரணை ஆரம்பமானதும் சமாதானப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ பொறுப்பதிகாரிகள் தங்களது பொறுப்பான கடமைகளிலிருந்து தவறியிருப்பதாக விசாரணைகள் மூலம் வெளியானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், இலங்கை இராணுவத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் இச்செயல்பாடு நடைபெற்றதா எனவும் விசாரணையின்போது ஆராயப்படும்.
கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஹெய்ட்டி ஐ.நா. படையில் இராணுவ சிப்பாய் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய விசாரணை அறிக்கை ஐக்கிய நாட்டு சபையின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் இருந்து செல்லும் விசாரணைக் குழு ஹெய்ட்டியிலுள்ள அனைத்து இலங்கை இராணுவ முகாம்களுக்கும் சென்று இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதுடன் இதைப் போன்று சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் விசாரணை குழுவிற்கு இராணுவ தளபதியினால் அறிவுறுத்தல் விடுக்கப்படும்.
0 comments :
Post a Comment