Sunday, September 8, 2013

தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் கெவின் ரெட்

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் தாம் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கெவின் ரெட் அறிவித்ததை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் மத்திய இடதுசாரி கட்சியின் 6 வருட கால ஆட்சி முடிவுக்கு வருவாக செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் டொனி அபேர்ட்டின் தலைமையிலான லிபரல் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிப்பதாக ஏற்கனவே சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததுடன் 150 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ரொனி அபேர்ட்டின் கட்சிக்கு 97 ஆசனங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.

தேர்தல் நிறைவு பெற ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சி கூட்டமைப்புக்கு 53 வீத வாக்குகளும் ஆளும் தொழில் கட்சிக்கு 47 வீத வாக்குகளும் கிடைக்கும் என எதிர்வு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment