பொலிஸ் காணி அதிகாரம் பெறுவது விக்கியின் நோக்கமல்ல! அரசின் முயற்சியைத் தலைகுப்புறச் செய்வதே அவரது குறிக்கோள்!
ஜெனீவா சென்றாவது காணி உரிமையைப் பெற்றுக்கொள் வோம் எனவும், இராணுவ ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யத் தயாரில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாக அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன், அரசு பெற்றுக் கொடுத்துள்ள ஜனநாயக த்தின் ஊடாக பிரிவினைவாதத்தை சந்தைப்படுத்தி, பிரிவினைவாத அமைப்புக் களின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் அமைப் பின் சட்டத்தரணி கபிலகமகே இவ்வாறு தெரிவித்தார்.
அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் உப பிரிவு 07 இன் பிரகாரம் முதலமைச்சர் நியமனம் பெற்ற ஒரு மாதத்துக்குள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி பெயரிடும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யலாம்.
சட்ட அறிஞரான விக்னேஸ்வரன் அரசமைப்பு, அதன் மூலம் கூறப்பட்டுள்ள ஒற்றையாட்சி, ஜனநாயகம் சகலவற்றையும் அறிந்தவர். அவர் இக்கூற்றின் மூலம் பொலிஸ் அதிகாரத்தைக் கேட்கவில்லை. காணி அதிகாரத்தைக் கேட்கவில்லை. அரசு ஜனநாயகத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சியைத் தலைகுப்புறச் செய்வதும் பிரிவினைவாத தனி அலகு கோருவதற்கு வழிவகுப்பதும் அவரின் தேவையாகும்.
எமது உரிமைகளைப் பறித்துக் கொண்டதாக ஜெனீவாவுக்குச் சொல்வதே அவரின் எண்ணமாகும். தனிநாடு தான் அவரின் எண்ணம். வட மாகாண மக்கள் தமக்கு வழங்கிய 80 வீத அதிகாரத்தைப் பறிப்பதாக ஜெனீவாவில் அவர் கூறப்போகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டது, நாட்டுப் பிரிவினை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
வடக்கு மக்களை நாம் நம்ப முடியுமானாலும் பயங்கரவாதத்தை நாம் அங்கீகரிக்க முடியாது. நாட்டின் அரசியல்வாதிகளின் தவறான செயல்களை விக்னேஸ்வரன் ஆயுதமாகப் பாவிக்கிறார். திம்பு பேச்சுவார்த்தை இதற்கு தக்க உதாரணமாகும். மக்கள் அரசின் நல்ல தன்மையை விக்னேஸ்வரனுக்கு ஆயுதமாகப் பாவிக்க ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் 30 வருட யுத்தத்தை முடித்து வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்த அரசை ஜெனீவாவுக்கு கொண்டுசென்று தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் வட மாகாண முதலமைச்சர் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment