Tuesday, September 17, 2013

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இராணுவ உடையில் வந்தவர்கள் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகம்!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள கடற்படை தளத்திற்குள் இராணுவ உடையில் வந்த மூன்று பேர் நேற்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.

மிகவும் பாதுகாப்பான பகுதியான இங்கு தைரியமாக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் இருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பொதுமக்கள், பொலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தியவர்களில் 50 வயதான ஒருவரை பொலீசார் சுட்டுக் கொன்றனர். இராணுவ உடையில் வந்த மற்ற இருவரையும் பொலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதில் ஒருவன் 50 வயதுமதிக்கத்தக்க கறுப்பர் என்று கூறப்படுகிறது.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இங்கு நூற்றுக்கணக்கான பொலீசார் மற்றும் இராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். இதையடுத்து தலைநகரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.

தாக்குதலின் முக்கியப் புள்ளியின் பெயர் டெக்சாசைச் சேர்ந்த ஆரோன் அலெக்சிஸ், வயது 34 என்று எப்.பி.ஐ. அடையாளம் கண்டுள்ளது. கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளவர்களை உடனடியாக நீதியின் முன் நிறுத்த அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com