உலகின் மிக அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை முன்னணியில் உள்ளது - பாதுகாப்பு மாநாட்டில் கோட்டாபய
உலகின் மிக அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை முன்னணியில் உள்ளது. எனினும் சில மேற்கு நாடுகளும் எல்.ரி.ரி.ஈ இற்கு ஆதரவான குழுக்களும் இந்த சக வாழ்வை சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று ஆரம்பமாகிய பாதுகாப்பு மாநாட்டின் அங்குராப்பண உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு செய லாளர் இவ்வாறு தெரிவித்தார்.
மனிதாபிமான நடவடிக்கையை தொடர்ந்து 3 வது தடவையாக இலங்கை இரா ணுவம் பாதுகாப்ப செயலாளரின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு மாநாட்டை ஏற்பாடு செய்தது. "யுத்தத்தின் பின்னர் இலங்கையின் சவால்கள் மற்றும் பிராந்திய நிலைப்பாடு" என்பதே இம்முறை மாநாடடின் தொனிப்பொருளாகும். 29 நாடுகளின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், புத்தி ஜீவிகள், பேச்சாளர்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் அங்குரார்ப்பண விழா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் மாநாடு இடம் பெற்றது.
யுத்தம் முடிவடைந்து கடந்த சில ஆண்டுகளுக்குள் அரசாங்கம் பாதுகாப்பு படையி னருடன் இணைந்து மக்களின் அன்றாட நடவடிக்கைளை கட்டியெழுப்புவதற்கு வடக்கு, கிழக்கு, உட்பட ஏனைய பகுதிகளில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகள் ஏராளம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்தை அறிவுறுத்துவதுடன், இலங்கை தொடர்பாக நிலவும் பிழையான கருத்துக்களை நீக்கி, நாட்டின் அபவிருத்தி ஊடாக ஏற்படும் பிராந்திய ரீதியிலான நிலைப்பாடு மற்றும் அதனுடன் கூடிய சவால்களை வெற்றி கொள்வதற்கு மாநாடடின் ஊடாக எதிர்பார்க்கப் படுகின்றது.
பாதுகர்ப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாநாட்டில் உரையாற்றுகையில், 3 தசாப்தகால பயங்கரவாதத்தை தொடர்ந்து இலங்கை பாரியளவில் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இன்று உலகில் அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை முன்னணி வகிக்கின்றது. ஒரு கரடுமுரடான பாதையிலேயே நாம் இந்த பயணத்தை வந்தோம். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு தடைகளை நாம் வெற்றிகரமாக தாண்டியுள்ளோம்.
2010 ஆம் ஆண்டு முழ நாட்டையும் உள்ளடக்கும் வகையில் ஜனாதிபதிதேர்தலை எம்மால் நடத்த முடிந்தது. இன, மத, பிரதேச பாகுபாடு இன்றி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் காணப்பட்ட வீதி தடைகள், மீனவர்களின் கடல் எல்லை நிர்ணயம், வடக்கிற்கு பொருட்களை அனுப்புவதில் காணப்பட்ட தடை ஆகியன நீக்கப்பட்டன.
பலாளி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன பொது மக்கள் பாவனைக்கென திறக்கப்பட்டன. அபிவிருத்தி பணிகள் ஊடாக மக்களின் உள்ளங் களை வென்றெடுத்தோம். தமிழ் பேசும் பொலிஸார் வடபகுதிக்கு அனுப்பப்பட்டனர். சகல வாழ்வை ஓர் இரவில் மேற்கொள்ள முடியாது. அவற்றை நாம் படிப்படியாக மேற்கெர்ண்டு வருகின்றோம்.
வட மாகாண சபை தேர்தலுக்கான ஆயத்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம். 3 தசாப்தகால பயங்கரவாதத்தின் பின்னர் விவசாயம், கடற்றொழில், நெடுஞ்சாலை கள் உட்பட பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் நாடு ஈட்டியுள்ள அபிவிருத்தி பாராட்டத்தக்கது.
இதே நேரம் இலங்கை தொடர்பாக வெளிநாடுகளில் பிழையான கருத்துக்களை பரப்பு வதற்கு சில இணைய தளங்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன. எனினும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பிராந்திய நாடுகளுடன் சர்வதேச ரீதியில் சாதக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள எம்மால் முடிந்துள்ளது என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment