தனியார் பஸ்கள் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு கைமாற்றம்?
வெளிநாட்டுக் கம்பனிகள் பலவற்றுக்கு இந்நாட்டுத் தனி யார் பஸ்கள் கைமாற்றுவதற்கு ஆயத்தமாகவிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என அகில இலங்கை தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிடு கின்றது.
இது அரசாங்கம் தனியார் போக்குவரத்துச் சேவையினை முன்னெடுத்துச் செல்வதற்கு குறைந்தளவாகவேனும் வசதிகளைப் பெற்றுத்தராமையும் நட்டம் ஏற்படாதிருக்கக் கூடிய வண்ணம் வருடத்திற்கு ஒருமுறையேனும் கட்டண உயர்வினை மேற்கொள்ளவிடாமையும் தனியார் பஸ் உரிமையாளர்களை பலவீனப்படுத்தும் சூட்சுமாக இருக்கின்றதா என்பதை தேடியறியவுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியங்ஜித் குறிப்பிடுகிறார்.
இந்த நடவடிக்கையின் மூலம் தனியார் பஸ் போக்குவரத்து தொழிலானது வீழ்ந் துமடிய, தனியார் பஸ் சேவையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றுவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெளிவுறுத்துகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment