அமைச்சருக்கு வாக்களிக்க மறுப்பு!
வடமேல் மாகாண சபைக்காக சிலாபம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற அமைச்சரொருவரை அங்கு கடமையிலிருந்த அதிகாரிகள் வாக்களிப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
கட்டுநேரிய சென்.செபஸ்டியன் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடிக்கு வாக்களிக்க சென்ற அமைச்சர் தயாசித்த திசேராவுக்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டையை எடுத்துசெல்லாமையை அடுத்தே வாக்களிப்பதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பிய அமைச்சர் அடையாள அடையுடன் சென்று வாக்களித்துள்ளார்.
0 comments :
Post a Comment